Thursday, February 24, 2011

அன்பே போகாதே!

பூவில் வண்டு வந்து நுகரும் பொழுது
தேன் துளிகள் பிரியாவிடை கொடுக்கும்.

பாதை பிரியும் பொழுது
பயணங்கள் பிரியாவிடை கொடுக்கும்.

விடியல் வரும் பொழுது
இரவு பிரியாவிடை கொடுக்கும்

முதுமை வரும் பொழுது
இளமை பிரியாவிடை கொடுக்கும்.

அன்பே நீ என்னை விட்டு போகும் பொழுது
என் உயிர் எனக்கு பிரியாவிடை கொடுக்கும்.

அன்பே போகாதே!.

1 comment:

  1. கவிதா கவிதா ச்சி கவித கவித

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...